கொடைக்கானல்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 20 Dec

கொடைக்கானல் மேற்கு தொடர்சி மலைத்தொடரில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம்.கொடைக்கானல் ஏரி கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர். மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். வெள்ளியருவி கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவியாகும். தூண் பாறைகள் ஏரியிலிருந்து 7.4 கி.மீ தொலைவில் உள்ளது. 122 மீட்டர் உயரத்தில் மூன்று செங்குத்தான தூண் பாறைகள் நிற்கின்றன. பசுமைப் பள்ளத்தாக்கு மிக மிக ஆழமும் அபாயமும் கொண்ட பள்ளத்தாக்கு. இதற்கு முந்தைய பெயர் தற்கொலை முனை. வைகை அணையை இங்கிருந்து ஓர் அழகான கோணத்தில் காணமுடியும். கோடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like