முத்தரையர்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov

தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன. முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கர் இனமக்கள் முடிராஜ், முத்தராசி ,என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோழி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், கங்கைபுத்திரர், கோழி மற்றும் காபல்கார், என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் அழைப்பர் இந்தியாவின் வடமாநிலங்களில் இம்மக்களை கோழி (Koli) என்றும் அழைப்பர். நாயக்கர் இன மக்கள் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like