புரவியெடுப்பு

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

புரவியெடுப்பு அல்லது குதிரையெடுப்பு என்பது நாட்டுபுறத் திருவிழாக்களுள் ஒன்றாகும். புரவி என்பதற்கு குதிரை என்பது பொருளாகும். மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறைக்கு புரவியெடுப்பு என்று பெயர். இவ்வகை வழிபாடு பெரும்பாலும் தென்தமிழகப் பகுதிகளில் காணப்படுகிறது. ஐயனாரின் வாகனமாக விளங்கும் குதிரைகளுக்குச் செய்யும் மரியாதையாக இவ்விழா நிகழ்கிறது. இதனை உருவாரம் எடுத்தல் எனவும் வழங்குவர். படத்தில் காண்பது போன்ற குதிரை உருவங்களையும், தாத்தா, பாட்டி உருவங்களையும் தலையில் சுமந்து சென்று கோயில்களில் வைப்பர். "உனக்கு உருவாரம் எடுக்கிறேன். என் துன்பத்தைப் தீர்த்து வை" எனத் தெய்வத்தின்மீது சார்த்தி உறுதிமொழி எடுத்துக்கொளவர். இன்னல் தீர்ந்ததும் தெய்வம் தீர்த்துவைத்ததாக நம்பி உருவாரம் எடுப்பர்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like