சித்த ரகசியம்

Thamizh • By அம்பிகா சரவணன் • Posted on 14 Jan

நோய் வராமல் உடலைக் காப்பது, நோய் தீர்க்கும் மூலிகைகள், பத்திய முறைகள், வர்ம மருத்துவம், யோகமுறைகள் என அனைத்தையும் எளிமையாகச் சொல்லும் இந்த சித்த ரகசியம் நூல்(ISBN 978-81-8368-208-1) சித்த மருத்துவப் பெருமைகளையும் சேர்த்து அளிக்கும் நூலாக 104 பக்கங்களுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் அறிமுகம் சித்த மருத்துவம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் அட்டாங்க யோகம், சித்தர்களின் பேராற்றல்கள், சித்த மருந்துப் பிரயோகங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவத்தின் அடிப்படை உயிர்த் தாது, வளி(வாதம்), அழல்(பித்தம்), ஐயம்(கபம்) போன்றவை விளக்கப்பட்டு வாத, பித்த, கப் உடலைக் கொண்டவர்களின் உடல் அமைப்பு முறைகள், அவர்களது பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், வெறுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் அறுசுவைகளின் செயல்களைத் தெரிவித்து, அதன் அதிகரிப்பாலும் குறைவாலும் ஏற்படும் விளைவுகள் சொல்லப்பட்டு நோயாளிகளைப் பரிசோதிக்கும் முறை, மருந்துகள், பத்தியம் ஆகியவை குறித்தும் விளக்கமளிப்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வரும் பொதுவான சில நோய்களுக்கான அறிகுறிகளும், அதற்கான கைமுறை மருந்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வர்ம மருத்துவம் இத்தலைப்பில் கழுத்துக்கு மேலே முன்புறம் உள்ள 26 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை மார்புப்புறம் உள்ள 34 வர்மங்கள், கழுத்துக்கு மேலே, பின்புறம் உள்ள 11 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை முதுகுப்புறம் உள்ள 16 வர்மங்கள், கையில் முன்பக்கம் உள்ள 10 வர்மங்கள், காலில் உள்ள 11 வர்மங்கள் என வர்மம் குறித்து படத்துடன் சிறு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. காயகற்பம் காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும். காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது.காலையில்வெறும்வயிற்றில், ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சூரணத்தைக் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து, இளஞ்சூட்டில் மெதுவாகசுவைத்து குடிக்கவேண்டும்.இது கல்லீரல் , மண்ணீரல் , சிறு நீரகம் , இதயம் , வ்யிறு போன்ற ராஜ கருவிகளில் தேங்கியுள்ள விஷங்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதுடன் . உடலிலுள்ள சப்த தாதுக்களையும் வலுப்படுத்தி,இரத்தத்தை மேம்படுத்தி ஆயுளையும் அதிகரிக்கிறது.
எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like