தமிழ் மருத்துவத்தின் வரலாறு

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது. ^^தமிழ் மருத்துவ வரலாறு#^^ முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும். ^^பயன்கள்#^^ தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதப்பட்டால், மரபுவழி மருத்துவத்தின் மூலம் மரபு நோய்களும்' உலக மருத்துவத்தில் மருந்துகள் கண்டறியப் படாதிருக்கும் பல நோய்களும் எவ்வாறு குணப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பன அறியக் கூடும். ^^வரலாறு எழுது முறை#^^ மருத்துவத்துக்கும் பழமையான இனத்துக்கும் உரிய தொடர்பு, மருத்துவத்தின் தேவையை உணர்ந்த முறை' மருத்துவம் கண்டறியப் பட்டதன் காரணம்' மருத்துவம் நிகழ்ந்த சூழல், மருத்துவத்தினால் உண்டான பாதுகாப்பு' மருத்துவத்துக்குப் பயன்பட்ட பொருள்கள். அவற்றைப் பற்றிய கல்வி போன்றவற்றை முறைப்படுத்தி எழுதுதல் வரலாறு எழுதும் முறையாகக் கருதப்படும். ^^ஆய்வின் எல்லை#^^ தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இவ்வியலில், சங்க காலந் தொடங்கி, யூகி என்னும் மருத்துவச் சித்தர் காலம் வரை' கிடைக்கின்ற குறிப்புகளைக் கொண்டு மருத்துவ வரலாறு ஆராயப்படுகிறது. ^^பண்டைக்காலத் தமிழகத்தில் மருந்து#^^ பண்டைக்காலத் திராவிட மக்களாகிய தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர் களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து' மான்கொம்பு, பவழம்' தாளகம் போன்ற மருந்துப் பொருள்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேதகாலத்திற்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம், இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கிறது. அது பின்னாளில், மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற் கேற்பப் பிரிந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளில் வளர்ந்தது 1என்பர். ^^அறுவை மருத்துவக் கருவி#^^ புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது. புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது. ^^இசை மருத்துவம்#^^ நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், மணந்த மணம், இனிய இசை' அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன. ^^போர்க்கள மருத்துவம்#^^ பண்டைக்கால மருத்துவ முறைகளாகச் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் மருத்துவ முறைகள் அனைத்தும் போர் வீரர்களுக்குப் போரினால் ஏற்படுகின்ற புண்ணையும்' அதற்குண்டான மருந்து, மருத்துவம், மருத்துவன் ஆகியவை பற்றிய செய்திகளாகவுமே காணப்படுகின்றன. காரணம், வீரம் பற்றிய செய்திகளையே புறப் பாடல்கள் கூறுவனவாக அமைவதனால்' அது தொடர்பான செய்திகள் மட்டுமே புலவர்களால் போற்றிப் பாடப்பட்டிருக்கின்றன. ^^நோயாளர் ஆடை#^^ நோயாளிக்கு அணியவும் போர்த்தவும் செய்கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலியின் மயிரினால் செய்யப்பட்டது என்பர். எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை' போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது. பனிக்காலத்தில் அணிவதற்குரியது; கிடைத்தற்கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like