கலை என்றால் என்ன?

Thamizh • By அம்பிகா சரவணன் • Posted on 24 Jul

கலைக்கு எந்த ஒரு உலகளாவிய வரையறையும்  இல்லை , விளக்கமும் இல்லை. ஆனால் கலை என்பது  கற்பனையை  பயன்படுத்தி அழகான அல்லது அர்த்தமுள்ள ஏதாவது ஒரு  உணர்வு உருவாக்கம்  என்ற ஒரு பொது ஒருமித்த கருத்து  உள்ளது. கலை என்பது அகநிலை சார்ந்த ஒரு வடிவமாகும். தன் உள்ளுணர்வு மூலம் வெளிபடுத்தும் ஒரு வடிவமே கலை என்று அறியப்படுகிறது. கலை என்பதன் பொருள் வரலாற்றின் பல்வேறு காலங்களில் பல்வேறு விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 
 

கலை பற்றிய சில மேற்கோள்களை இப்போது பார்க்கலாம்.

1. கலை என்பது மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. கலை இல்லையேல் உலகமே இல்லை.

- ரெனே மக்ரிட்

2. கலை என்பது மனித பயன்பாட்டிற்காக பொருத்தமான அழகான வடிவங்களில் இயற்கையின் அடிப்படைக் கோட்பாடுகளின் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி.

- ஃபிராங்க் லாயிட் ரைட்

3. கலை நம்மை நாமே கண்டுபிடித்து அதே நேரத்தில் நம்மை இழக்க உதவுகிறது.

- தாமஸ் மெர்டன்

4. நமது ஆன்மாக்களின் அன்றாடம் படியும் தூசியைப் போக்குவதே கலையின் நோக்கம். 

- பப்லோ பிக்காசோ

5. எல்லா கலைகளும் இயற்கையின் பிரதிபலிப்பாகும்.

- லூசியஸ் அன்னியஸ் செனிகா

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like